மட்டக்களப்பில் மின்சார மீற்றரில் மோசடி செய்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது —

கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக  பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் இருவரை கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகளினால் நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீற்றரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பில் இருந்து சம்பவதினமாhன நேற்று வருகைகதந்த உத்தியோகத்தர்கள் பொலிசாருடன் குறித்த இரு வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன் போது மின்சார மீற்றரை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெற்றுள்ளதை கண்டுபிடித்ததையடுத்து அந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ;