(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீதி நாடகத்தினை பல்கலைக்கழக இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பாடசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் தர்ஷனி ஸ்ரீகாந்த், கணக்காளர் எஸ்.உஷாந்தினி, பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பாசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.