(கனகராசா சரவணன்) பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் முதலமைச்சர் காலத்தில் இருந்து அவருக்கு தொழில் காணி பிடிப்பது ஆள்கடத்துவது கொலை கொள்ளையடிப்பது தான் எனவே பிள்ளையான் எனது சகோதரன் கோவிந்தராஜன் கடத்தி கொல்லப்பட்டது தொடக்கம் எனது பத்திரிகையாளரை கொல்லப்பட்டது வரைக்கும் செய்யப்பட்ட கொலைகள் தொடர்பாக ஆதாரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப் போவதாக இராயநாயகம் பிரபாகரன் (ஈரோஸ்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ளு உடக வள நிலையமான வெய்ஸ் ஒப் மீடியாவில் இன்று புதன்கிழமை (23) இடம்பெற்று ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உயிர்த ஞாயிறு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என சர்வதேசத்திற்கு தெரியும் சாதாரன பொதுமகனுக்கும் தெரியும் இதில் பலதரப்பட்வர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் இதற்கு முதலில் சர்வதேச விசாரணை தேவை
இது அரசியல் இருப்பிடத்தை தக்கவைப்பதற்கு அரசியலை உறுதிப்படுத்துவதற்கு கதிரைகளை கைப்பற்றுவதற்கான அப்பாவி மக்கள் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதியை சிறையில் சந்தித்ததாகவும் என்னுடைய யூகம் இருந்தது இவர் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதியுடன் தொடர்பு இருந்தது என ஊடகம் ஒன்றில் பிள்ளையான் தெரிவித்துள்ளாh.; எனவே ஜ.எஸ்.ஜ.எஸ். என யூகம் இருந்தால் இந்த நாட்டிலும் மக்களிலும் பற்றிருந்திருந்தால் ஏன் பொலிசாருக்கு பிள்ளையான் அறிவிக்கவில்லை? எனவே இவைகள் மறைக்கப்பட்டுள்ளது இவைகள் விசாரணைக்கு வரவேண்டும்
பிள்ளையான்; தப்புவதற்காக கொஞ்ச மக்களை பஸ்களில் ஏற்றிவந்து அவரது காரியாலயத்தில் வைத்து கேற்றை திறந்து அவர் சொல்வதை மக்கள் சொல்லுமர்று திணிக்கப்பட்டனர் எனவே மக்களை ஏமாற்றுவதை நிற்பாட்டவேண்டும் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றுவார்.
மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பகுதி நாங்கள் 83,84 விடுதலை போராட்டத்தில் பங்கு கொள்ளுகின்றபோது அங்கு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் 300 குடும்பங்களுக்கு மேல் சேனைபயிர்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள தமிழ் மக்களின் பாரம்பரியம் அந்த மக்களுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதுகொலும்பு இருக்க வேண்டும் .
ஜனாதிபதி மக்களின் காணிகளை வழங்குமாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தால் என்ன அரசாங்க அதிபராக இருந்தால் என்ன அல்லது தமிழ் அமைச்சர்களாக இருந்தால் என்ன அதற்கான ஆழுமை அவர்களுக்கு இருக்கவேண்டும்.
இன்று அரச அதிகாரிகள் துஷ;பிரயோகம் செய்கின்றனர் அல்லது கவலையீனமாக இருக்கின்றனர் கீழே குப்பை பைய் தூக்குவதில் இருந்து அமைச்சின் செயலாளர் வரைக்கும் பந்தம் வழங்கவேண்டும் பணத்தை கொடுத்தால் வேண்டியதை செய்யலாம். தமிழ் மக்களுடையதே அல்லது முஸ்லீம் மக்களுடையதே சிங்கள மக்களுடையதே எந்த மக்களுடைய காணிகளை வேறு இனமக்கள் சூறையாட முடியாது அந்தந்த மக்களுக்குரிய காணி அந்தந்த மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
அதுடமட்டுமல்ல பிள்ளையான் முதலமைச்சர் காலத்தில் இருந்து அவருக்கு தொழில் காணி பிடிப்பது வாழைச்சேனையில் இருந்து மேற்குபக்கமாக பார்த்தால் 300 ஏக்கர் தென்னம் தோப்பு அவருடைய அப்பாவின் பரம்பரை 5 தலைமுறைக்கு மேலானு என ஊடகம் ஒன்றில் பேட்டிவழங்கியுள்ளார் இது எங்கேயே கள்ள உறுதியை செய்துள்ளார்.
வாகரையில் 2 ஆயிரம் ஏக்கர் காணி சூறையாடி ஒவ்வொருவருடைய பினாமி பெயரில் எழுதிவைத்துள்ளதுடன் ஆள்கடத்துவது கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும் தான் அவரின் தொழில் எனவே அப்பாவிமக்களின் கண்ணீர் விடாது என்றார்.