அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஆங்கில தினப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவி டிக்ரசன் போட்டியில் முதலிடத்தினைப் பெற்று தேசிமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயில்கின்ற ஜெயசங்கர் ஜக்சானிக்கா என்ற மாணவியே குறித்த போட்டியில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.