மன்னாரில் 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்கள்  கைது.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் கடற்தொழில் உதவிபணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வில் மன்னாரில் 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்களை படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க் கிழமை (19) இடம்பெற்றது.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது மன்னார் கடற்தொழில் உதவிப; பணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வில் மீன் பிடிப்பதற்காக 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் மீன்பிடித் தேவைகளுக்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்தத் திட்டமிட்ட 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
மீன்பிடிக்க வெடி மருந்துகளைப் பயன்படுத்துவது கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். மற்றும் பிற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை ஒடுக்குவதற்கு  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவைகள் கைப்பற்றப்பட்டன..

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீன்பிடிக்க வணிக ரீதியிலான வெடிமருந்துகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்துஇ 05 சந்தேக நபர்களையும் 13 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் அவர்களது டிங்கி படகுகளுடன் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 41 வயதுக்குட்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 13 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.