(நூருல் ஹுதா உமர்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2021/2022 வருட கல்வியாண்டில் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 2023.09.18 ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீடத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதி பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாரூன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வின்போது துறைத்தலைவர்களான பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர் (Head of the Dept. of Computer Sc.), கலாநிதி ஏ.எம்.றியாஸ் அகமட் (Head of the Dept. of Biological Sc.), கலாநிதி எம்.என்.எம். பர்ஹத் (Head of the Dept. of Chemical Sc.), எம்.ஏ.ஏ.எம். பஹம் (Head of the Dept. of Mathematics Sc.), கலாநிதி எம்.ஜே.எம். ஜெபீன் (Head of the Dept. of Physical Sc.) மற்றும் பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி ஆகியோரும் உரையாற்றினர்.
பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற இந்த முதல்நாள் நிகழ்வின்போது மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.