(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கிரான்குளத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரும் வவுணதீவு கரவெட்டியில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் உட்பட 4 போரை நேற்று திங்கட்கிழமை (18) இரவு கைது செய்துள்ளதாக அந்ததந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுதது காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் விஸ்ணு கோவில் வீதியிலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இரு வீடுகளை சம்பவதினமான நேற்று பொலிசார் முற்றுகையிட்டனர் இதன் போது வீட்டின் நிலப்பகுதியில் நிலத்தில் கான் ஒன்றுpல் புதைத்து வைக்கப்பட்டிருந்து 120 லீற்றர் கோடாவை மீட்டதுடன் ஒருவரை கைது செய்ததுடன் அந்த பகுதியிலுள்ள இன்னொரு வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் ஒரு லீற்றர் கசிப்புடன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
அதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் கடந்தஒருமாதத்திற்கு முன்னர் 3 வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை பூட்டிவிட்டு யாழ்ப்பானம் கதர்காமம் போன்ற இடங்களுக்கு ஆலையம் தரிசிக்க சென்று திரும்பிய நிலையில்; வீடுகளை உடைத்து ஒரு வீட்டில் 60 ஆயிரம் ரூபா பணம், மின்விசிறி, மற்றொரு வீட்டை உடைத்து அங்கு 40 ஆயிரம் ரூபா பணம் ரிவி, மின்விசிறியையமு; அடுத்த வீட்டில் ஜபோன் ஒன்றும் திருட்டு போயிருந்தது
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் நேற்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 26 ஈ20 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் திருடப்பட் பொருட்களை மீட்டுள்ளனர்.
இந்த இரு வௌ;வேறு சம்பவங்களில் கைது செய்த 4 பேரையும்; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.