பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தளபாடங்கள் கையளிப்பு.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் பல வருட காலமாக காணப்பட்ட தளபாடப்பற்றாக்குறை தொடர்பாக கல்விச் சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக லண்டனில் இயங்கும் ஒரு பானை அமைப்பின் அமைப்பாளர்களான திருவாளர்களான பாலசுப்பிரமணியம், திருவாளர் சுவாமிநாதன் ஆகியோரின் நிதிப்பங்களில் முதற்கட்டமாக 21 கதிரை, மேசைகளை இடை நிலைப்பிரிவு மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் முதல்வர்.தங்கராசா சசிகாந்தன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.
நிகழ்வில் ஒரு பானை அமைபின் பிரதிநிதிகளான சாய்ரஜன் மற்றும் முருகதாஸ் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளை திறன்பட முன்னெடுத்துச் செல்லும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான ஜோ.மேவின் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.