(கனகராசா சரவணன் ) இலங்கையில் அடுத்த குண்டு வெடிக்கும் அது இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த ராஜபக்ஷ தரப்பினர் வைக்கபோகின்றனர். தந்தை செல்லா தமிழர்களை கடவுள்தான் காக்க வெண்டும் என்று அந்த கடவுள் இப்போது உண்மையை சனல் 4 மூலம் வெளிப்படுதியுள்ளது எனவே கிழக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பதவிவிலக வேண்டும் சுதந்திரமான விசாரணைக்கு இடம் கொடுக்க வேண்டும் அதுதான் ஒரு நீதியான செயலாக அமையும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இணைப்பாளர் வணபிதா மா..சக்தவேல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வோய் ஒப் மீடியா ஊடக வளநிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திலிபனின் 36 நினைவஞ்சலி வாரத்திலே இலங்கையின் அரசியல் நிலமை தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு இவற்றுக்கு மத்தியில் சனல் 4 ஆவண திரைப்படம் கொண்டுவந்துள்ள செய்தி இன்று முழுநாட்டையும் அச்சத்தில் ஆச்சரியத்தில் வியப்பில் ஆத்தி இருக்கின்றதுடன் இந்த நாட்டை ஆளுகின்றவர்கள் கொலைகாரர் என்பதை மீண்டுமாக வலியுறுத்தியுள்ளது.
1971 தெற்கில் நடந்த கிளர்சியின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படுகொலை கொல்லப்பட்டனர் அப்போது இளம் பெண் மனம்பேரி நிர்வானமாக்கி வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது என கிளர்ச்சி வரலாறு கூறுகின்றது
தெற்கில் 1988, 1989 ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் போது 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். எனவே தங்களுடைய இனத்தை, மதத்தைச் சார்ந்தவர்களையே கொலை செய்கின்ற ஆட்சியாளர்கள் இப்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான சான்றுதான் சனல் 4 வெளியிட்டுள்ள படம்.
2019 உயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பு தங்களுடைய ஆட்சியை மீண்டும் வலியுறுத்துவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி குளிர் காய்வதற்காகவும் தங்களை பாதுகாப்பதற்காகவும் கொலைகiளை செய்துள்ளனர் இது பாரிய மக்கள் படுகொலை.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வடகிழக்கிலே நடந்த படுகொலைகள் 2009 முள்ளிவாய்க்கால் இனபடுகொலை எல்லாம் தெற்கில் ஆட்சியாளர்களின் முகத்தை வெளிக்காட்டுகின்றது எனவே தங்களுடைய மக்களையே கொன்று குவித்தவர்கள் வடகிழக்கு மக்களை என்ன செய்திருப்பார்கள் என இன்று சர்வதேசம் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.
நாடாளமன்றத்தில் தெரிவுக்கழுவை அமைக்க போவதாக தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோருகின்றனர். அதேபோன்று ஜனாதிபதி ஆணைக்குழு இதை விசாரிக்கும் என தெரிவிக்கின்றார்.
1948 ம் ஆண்டில் இருந்து பல்வேறு விதமான ஆணைக்குழுக்களை அமைத்திருக்கின்றன இந்த ஆணைக்குழுக்கள் கொடுத்த அறிக்கைகள் ஒன்றும் நடைமுறைப்படுத்தவில்லை அது கிடைப்பிலே போட்டது தான் வரலாறு
எனவே ஜனாதிபதி ஆணைக்குழுவாக இருந்தால் என்ன நாடாளுமன்ற தெரிவுக்குழுவாக இருந்தால் என்ன இவை எல்லாம் உண்மையை மறைப்பதற்காக கிடைப்பிலே போடுவதற்காக குழிதோண்டி புதைப்பதற்கா அமைக்கப்படுவது ஒன்று எனவே இந்த விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.
அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது இதற்கு முதலில் பாராளுமன்றத்தை கலைத்து அத்தனைபேரும் அதிகாரமற்ற நிலைக்கு செல்ல வேண்டும் அதேநேரம் எதிர் கட்சியில் நிற்பவர்கள் இதனை பாவித்து ஆட்சிக்கு வந்தாலும் கொலையாளிகளை அவர்களும் பாதுகாக்த்தான் போகின்றார்கள்
இந்த கொலைகளை வைத்து அவர்கள் ஆட்சி நடாத்தத்தான் போகின்றார்கள் அவர்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது காரணம் அவர்களும் சேர்ந்து தான் வடகிழக்கிலே இனழிப்பிற்கு இன படுகொலைகளுக்கு காரணமாக இருக்கின்றனர் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கின்றோம்
2009 ம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் இனழிப்புக்கும் படுகொலைக்கும் நீதிகேட்டு நாங்கள் வீதியில் நிற்கின்றோம் மனித உரிமை பேரவைக்கு வருடா வருடம் சென்று வலியுறுத்துகின்றோம் ஆனால் அங்கும் எங்களுக்கு நீதி கொடுப்பார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது.
தெற்கில் இருக்கின்ற பாராளுமன்ற எதிரணியினர் அதேபோல அரச தரப்பில் இருக்கின்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என 2009 ம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் கேட்ட சர்வதேச விசாரண இப்போது அது நீதியானது என உறுதிப்படுத்தியுள்ளது
அதே இனப்படு கொலையாளிகள் யுத்த குற்றவாளிகள் அதே இராணுவம் சேர்ந்து 2019 ம் ஆண்டு இந்த குண்டுதாக்குதலை செய்துள்ளது என செய்தி வெளிவந்துள்ளதுடன் குண்டுவெடிப்பு நிகழப் போவது என இந்தியா ஏப்பிரல் முதல் வாத்திலும்; குண்டுவெடிப்பு நிகழ்ந் அன்றும் அராங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர் எனவே இந்த குண்டுவெடிப்பை யார் செய்தனர் என்ன நோக்கத்திற்காக செய்தனர் என இந்திய உளவு பிரிவுக்கு நிச்சயமாக தெரியும்.
எனவே இதற்கு பின்னால் பாரிய அரசியல் பின்ணி இருக்கின்றது மகிந்த கேட்ட தற்செயலாக ஆட்சி பீடத்திற்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக மக்கள் குரல் எழும்பவேண்டும் என்ற நீண்டகால நோக்கம் இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்திருக்கின்றது. சீன சார்புடைய இவர்கள் ஆட்சி பீடத்தை இருக்க கூடாது என் மேற்கு உலக அரசியல் இருந்திருக்கின்றது இந்திய புலனாய்வு பிரிவினர் மறை முகமாக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவே அவர்கள் உண்மையை மறைத்திருக்கின்றார்கள்.
இப்போது இலங்கையை ஆளப் போவது யார் அடுத்த தேர்தல் வரும் போது மீண்டுமாக ராஜபக்ஷ தரப்பினர் குண்டை வெடிக்க வைக்கப் போகின்றார்கள் அது வடகிழக்கு பகுதியிலே தொடர்சியாக காவி உடைதரித்த சிங்கள பௌத்த தேரர்கள் களத்தில் இருக்கின்றனர் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே மோதலை உருவாக்குகின்றதற்காக அடுத்து குண்டாக இருக்கலாம்.
எனவே தெற்கு மக்களிடம் கேட்கின்றோம் வடகிழக்கு மக்களின் குரலுக்கு செவிமடுங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் சர்வதேச நீதி விசாரணைக்கு ஆதரவு தாருங்கள் இல்லை என்றால் மீண்டும் உங்களை ஆளப் போவது கொலையாளிகள் எனவே சர்வதேச விசாரனை வேண்டும் அப்படி செய்தால் மாத்திரமே வடகிழக்கு மக்களுக்கும் தெற்கில் இருக்கின்ற நீதிகேட்கும் மக்களுக்கும் நீதிகிடைக்கும்
வடகிழக்கில் நடந்த போராட்டத்தை காட்டிக் கொத்தவர்களின் பெயர்கள்தான் சனல் 4 ஆவணம் குற்றவாளிகளாக்கியுள்ளது. வடகிழக்கு அரசியலுக்காக தேசத்தையும் தேசியத்தையும் காக்கவேண்டும் என்பதற்காக ஆயிரக்கனக்கானோரையும் நாங்கள் இழந்திருக்கின்றோம் இந்த இழப்பிற்கு கிழக்;கின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவும் காரணம்.
அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மகிந்த ராஜபக்ஷவின் கைக்கூலியாக செயற்பட்டிருக்கின்றனர் இவர்களின் பாதுகாப்பிற்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் கொலைகளுக்கு அஞ்சாதவர்கள் கொலைகளை செய்திருக்கின்றார்கள் என கிழக்கில் நடந்த பல்வேறு சம்பவங்கள் வெளிகொண்டுள்ளது.
கடத்தியிருக்கின்றனர் கொலை செய்துள்ளனர் காணிகளை கொள்ளை யடித்துள்ளனர் தெற்கின் ஆட்சி கொலையாளிகளின் கையில் சென்றதை போன்று கிழக்கின் நிர்வாம் கூட அவர்களுக்கு சார்பானவர்கள் அதேவேலை செய்கின்றவர் கையில் நிற்கின்றது எனவே சனல் 4 ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட வேண்டும் அதற்கு பூரண ஒத்துழைப்புவழங்கும் முகமாக முன்னதாக சுயமாகவே பிள்ளையான் பதவியில் இருந்து விலக வேண்டும் சுதந்திரமான விசாரணைக்கு இடம்கொடுக்கவேண்டும் அதுதான் ஒரு நீதியான செயலாக அமையும்
அதற்கு இடம்கொடுக்காவிட்டால் இந்த அரசாங்கத்தின் கீழ் மகிந்த கோட்டபாய காப்பாற்றுவார்கள் என நினைத்தால் அவர்களும் முன்னால் முதலமைச்சரை கைவிடுவார்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக எதிர்காலத்திற்காக தமது இனம் சமயம் சார்ந்து அவர்கள் இவர்களை கைவிடுவார்கள்.
எனவே இந்த உண்மை இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் அதற்கான நீதியை சர்வதேசம் நிலைநாட்ட வேண்டும் பிள்ளையான் தனது பதவி வவிலகல் கடிதத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்றார்.