இளைஞர்களின் அறிவாற்றல் சம்பந்தமான உளவியல் பயிற்சி பட்டறை.

(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் அறிவாற்றல் சம்பந்தமான உளவியல் பயிற்சி பட்டறை மாவடிச்சேனை அல்- இக்பால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களின் ஆலோசனையிலும் மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பிரதேச அமைப்பாளர் இஷட். எப். ஷிஹானி அவர்களின் தலைமையிலும் ஓட்டமாவடி பிரதேச அமைப்பாளர் இஷட். எப். ஷிமானி அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் 70 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் மனித மேம்பாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் டப்லியூ. ஷவ்தப் உசைம், காத்தான்குடி இளைஞர் சேவை உத்தியோகத்தர் எ.டப்லியூ .இர்சாத் அலி மற்றும், மாவடிச்சேனை அல்- இக்பால் வித்தியாலய அதிபர் எம். சி. அய்யூப்கான், அமைப்பின் ஊடக பிரிவுத்தலைவர் என். இம்றி முஹம்மட் என பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் வளவாளராக
காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையத்தின் விரிவுரையாளர் எ. றியாஸ் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம், வளவாளர் எ. றியாஸ், அதிபர் எம். சி. அய்யூப்கான் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் எ.டப்லியூ .இர்சாத் அலி ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்

IMG-20230916-WA0180.jpgIMG-20230916-WA0195.jpgIMG-20230916-WA0190.jpgIMG-20230916-WA0176.jpgIMG-20230916-WA0197.jpgIMG-20230916-WA0194.jpgIMG-20230916-WA0174.jpgIMG-20230916-WA0199.jpgIMG-20230916-WA0192.jpgIMG-20230916-WA0185.jpgIMG-20230916-WA0172.jpg