(கனகராசா சரவணன்) தியாகி திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேசம் எங்கள் இலச்சியம். அரசியல் வெல்லும் வரை திலீன் சாட்சியாக நாங்கள் போராடுவோம் எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சத்திவேல் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வணபிதா சத்திவேல் இவ்வாறு தெரிவித்தார்.
தியாகி திலீபனுடைய 36 வது நினைவு நாளில் சுடர் ஏற்றுகின்றோம் இந்த சுடர் தாயகத்தின் அரசியல் இலட்சியத்தின் சுடர் அன்று திலீபன் என கோரிக்கைகளை முன்வைத்தாரே அந்த கேரிக்கைகளை இன்றும் நாம் அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம் அந்த போராட்டம் வெற்றி பெறும்வரையில் பயணத்தை தொடருவோம் அவரின் பாhத்தில் சத்தியம் செய்கின்றோம்
எங்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் தியாகி திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது சிங்கள பௌத்தம் கொலை செய்யும் அழிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் தியாகி திலீபன் இருக்கின்றார்.
இந்த நாடு அழிவுகளுக்கு மத்தியிலே தான் இவர்கள் மகிழ்சியை காண்கின்றனர்கள் தங்களுடைய இனத்தையே அழிப்பவர்கள் 2019 உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு தெற்கிலே பாரிய வெடிப்பாக வெளிப்பட்டுள்ளது இந்த வெடிப்பிற்கு காரணமாணவர்கள் மகிந்த கோதபாய மட்டுமல்ல இந்தியாவும் பதில் சொல்லவேண்டும்.
2009 ம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு இலச்சத்துக்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டவர்களை இந்தியாவும் சர்வதேசம் பாத்துக் கொண்டது அவ்வாறு பார்த்துக் கொண்டதன் காரணமாகத்தான் 2019 ம் ஆண்டு இந்த குண்டுவெடிப்பு நடந்தது அவர்;களுடைய அரசியலுக்காக அரசியல் தேவைகளுக்காக இந்த நாட்டில் ஏழைகளை கொள்ளுவதற்காக ஆயத்தமாக இருக்கின்றனர்.
எனவே சர்வதேசத்தை பார்த்து கேட்கின்றோம் எங்களுக்கு நீதிவேண்டும் அது சர்வதேச தவையீட்டின் மூலம் ஏற்படுகின்ற நீதியாக இருக்கவேண்டும் இந்த நாட்டில் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை இப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்பட்டிருக்கின்றது.
நாங்கள் 14 வருடங்களாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றோம் இதற்கு செவிமடுக்காக தென்னிலங்கை அரசியல் வாதிகள் இப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றனர். எனவே இது தான் நீதி இது தான் மனுநீதி இது தான் இறைநீதி
எந்த மக்கள் சர்வதேச விசாரணை வேண்டாம் என கோரினார்களே அவர்களின் வாயாலே இப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்றால் இப்போது அவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் அதுவரை எமது போராட்டம் தொடரும்