மட்டக்களப்பில் 17 வயது மகள் மீது பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு மறியல்.

(கனகராசா சரவணன்) )  மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியான அவரது மகளை பாலியல் சேட்டை புரிந்த 58 வயதுடைய தந்தையை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியான மகள் மீது தந்தையாரான கணவன்  பாலியல் சேட்டை புரிந்துள்ளதாக தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 58 வயதுடையவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைணை கொக்குவில் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.