(எருவில் துசி)மட்டக்களப்பு களுதாவளையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று(15) அதிகாலை நடைபெற்றுள்ளது.
களுதாவளை 01 சேர்ந்த வி.ஜிது (26) இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் 2008 ம் ஆண்டு காலப்பகுதயில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதாவது எருவில், களுவாஞ்சிகுடி, களுதாவளை போன்ற கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த இளைஞனின் குடும்பத்தில் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இவர் மட்டும் அதிஸ்டவசமாக உயிர் தப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.