மாணவர்களுக்கான பதக்கங்கள் பொறிக்கப்பட்ட கோலுடை அணிவித்தலும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்.

(ந.குகதர்சன்) பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சு பாடசாலை மட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற சென் ஜோன் அம்ப்யுலன்ஸ் கடேற் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட எமது வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தின் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான பதக்கங்கள் பொறிக்கப்பட்ட கோலுடை அணிவித்தலும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஆராதனையில் இடம்பெற்றது.

வித்தியாலய முதல்வர் ஷல்மானுல் ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார , திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தாஜுநிஸா, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பொது வைத்தியர் ரிகாஸ், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் படைகளில் அங்கத்துவம் பெற்ற விசேட இராணுவ உத்தியோகத்தர் புஹாரி, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஓய்வுநிலை இராணுவ உத்தியோகத்தர் ஜுனைதீன் நபீர், கோறளைப்பற்று மத்திய மேற்பார்வை சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர் நஸீர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை எம்.எல்.டி.துணை மருத்துவ சேவைகள் உத்தியோகத்தர் குமார ,சமயபாட வலயமட்ட இணைப்பாளர் மௌலவி கதாபி, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் இம்ரான், உறுப்பினர் சோப்ரா நஹ்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதற் கட்டமாக தரம் 3 ல் கல்வி கற்கும் நூறு மாணவர்களுக்கு கோலுடைகளும் பதிவு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.