இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய17 இந்தியர்கள் கைது.

(கனகராசா சரவணன்) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் 17 பேரை இன்று வியாழக்கிழமை (14) அதிகாலையில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கடற்படையினரால் கைது செய்து கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம் கடற்படையினர் இன்று அதிகாலை 1 .30 மணியளவில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 படுகுகுளையும் 17 மீனவர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.