(வாஸ் கூஞ்ஞ) மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு சம்பந்தமான அறிக்கை ஒன்றை அகழ்வுக்கு பொறுப்பான விஷேட வைத்திய நிபுணர் ராஜபக்சவிடம் மன்றில் சமர்பிக்கும்படி ஏற்கனவே கேட்டு இருந்தது. ஆனால் நிகழ்ச்சி குறிப்புக்கள் இவருக்கு கிடைக்காமையாக இருந்தமையால் இவ்வழக்கு நிகழ்ச்சி குறிப்புக்களை அத்தாட்சிப்படுத்தி வைத்திய நிபுணர் ராஜபக்சவுக்கு வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு மன்று கட்டளைப் பிறப்பித்தது.
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (13) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது
ஏற்கனவே விஷேட வைத்திய நிபுணர் ராஜபக்ச அவர்களுக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை ஒன்று ஆக்கியிருந்தது அதாவது மன்னார் சதொச மனித புதைகுழி சம்பந்தமாக மேலதிகமாக என்ன செய்ய வேண்டும் என்று அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பிக்கும்படி கேட்டு இருந்தது.
ஆனால் நீதிமன்ற இதன் நாட்குறிப்பேடுகள் தனக்கு கிடைக்காமையால் அதன் சம்பந்தமான அத்தாட்சிப்படுத்தப்பட்ட சான்றை வழங்குமாறு விஷேட வைத்திய நிபுணர் ராஜபக்ச கோரிக்கையை இவ் வழக்கின்போது மன்றில் முன்வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வழக்கின்போது நிகழ்ச்சி குறிப்புக்களை அத்தாட்சிப்படுத்தி வைத்திய நிபுணர் ராஜபக்சவுக்கு வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு மன்று கட்டளைப் பிறப்பித்தது.
இவ்வழக்கில் காணாமல் போனோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனிகள் வி.எஸ்.நிரஞ்சன் திருமதி ஞானராஜா ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
இவ்வழக்கானது 08.11.2023 மீண்டும் அழைக்கப்படும் என தெரிவித்து நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.