(வாஸ் கூஞ்ஞ) தலைமன்னாரிலிருந்து வடகடலில் ஒரு வெளிக்கள இயந்திர படகின் மூலம் மீன்பிடிக்கச் சென்ற இருவர் இரண்டு நாட்கள் கடந்தும் இன்னும் கண்டு பிடிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை (12) பிற்பகல் தலைமன்னாரிலிருந்து ஒரு வெளிக்கள இயந்திரம் பொருத்தப்பட்ட படகில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைத் தேடி புதன் கிழமை (13) மூன்று படகுகள் சென்றிருந்தன.
காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தமையால் புதன் கிழமை தேடிச் சென்ற இரண்டு படகுகள் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நின்ற பின் மீண்டும் வியாழக்கிழமை (14) இப்படகுகள் கரைவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (14) வேறு மூன்று படகுகள் காணாமல் போனவர்களைத் தேடிச் செல்வதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.