“சிசுபல சமாஜ சத்காரய” வேலைத்திட்டத்தின் கீழ்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 (எம் எப். நவாஸ் அம்பாறை) மாவட்ட மட்டத்திலான சமுர்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான “சிசுபல சமாஜ சத்காரய” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் T.M.M அன்ஸார் அவர்களின் தலைமையில்  அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்டபார் கூடத்தில்  நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்டப் சமுர்த்திப் பணிப்பாளர்,
எம்.எஸ்.எம்.சப்றாஸ், விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் M.A.C.அகமது ஷாபிர் ஆகியோர் பங்கு பற்றியதுடன்  மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.