(அபு அலா) கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக குழுவின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர் தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயகா இன்று வழங்கி வைத்த கடிதத்தின் பிரகாரம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவண்டா, முதலமைச்சின் செயலாளர் என்.மதிவண்ணன், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எம்.எம்.நஸீர், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பனர்.