கிழக்கை மீட்போம் என கிழக்கை அழிக்கின்றவர்களை மண்ணை விட்டு அகற்ற வேண்டும். 

(கனகராசா சரவணன்) கிழக்கை மீட்கவந்தோம் என கூறிக் கொண்டு கிழக்கை இன்னொரு சமூகத்துக்காக தனிப்பட்ட ஒருவரின் நன்மைக்காக துரோகங்களை இழைத்து சமூகத்தை அழிக்கின்ற இவர்களை இந்த மண்ணையும் மக்களையும விட்டு அகற்ற வேண்டியது மட்டக்களப்பில் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் எனவே இவர்களை  சர்வதேசத்தின் முன்  நிறுத்தி எங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு மட்டு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 3 பேரை இழந்த  அரசரட்ணம் வேள் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 3 பேரை இழந்தவர்களுக்கு தேவாலயத்தில் முன்னால் இன்று திங்கட்கிழமை (11)  அரசரட்ணம் வேள்; அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.நான் அரசரட்ணம் வேள் மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் ஈஸ்ரர் குண்டு தாக்குதலில் எனது ஒரே ஒரு மகன் மற்றும் மூத்த சகோதரி அவரது கணவன் 3 பேரை இழந்ததுடன் சகோதரிகள் இருவர் படுகாயமடைந்ததுடன்  உயிரிழந்த சகோதரியின் சிறுமியான மகள் இரு கண்களும் பார்வையின்றி பாதிக்கப்பட்டு;  இருந்து வருகின்றனர்.

தற்போது நாட்டில் பேசும் பொருளாhக மாறியிருக்கின்ற ஈஸ்ரர் குண்டுதாக்குதலுக்கு  முதலில் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். காரணம் நூறுவீதம் இந்த குண்டுதாக்குதலில் பாதிக்கப்பட்டவன்  என்றவகையில்

எங்களுடைய அப்பாவி மக்களது உயிர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை அரசியல் தலைவர்களும் ஏனையவர்களும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் வேதனையுடன் இருக்கும் எங்களை தொடர்ந்து காயப்படுத்துகின்ற செயலாகவே அமைகின்றது .

நான் இலங்கை நாட்டையும் நாட்டு சட்டத்தையும் பூரணமாக நம்புகின்றேன் ஆனால் இலங்கை சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு நிரந்தர தீர்வும் இழப்பீடும் கிடைக்காது காரணம் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதை நான் ஒரு வீதமும் நம்பவில்லை ஏன் என்றால் நாட்டின் சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காது.

எனவே இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் அதன் செயலாளர் மற்றும் தற்போது கிழக்கை மீட்பதாக கூறி கிழக்கை அழிவுப் பாதைக்குள் கொண்டு செல்லுகின்ற அரசியல் தலைவர் அனைவரும் சர்வதேசத்தின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக எங்களுக்கு நீதியை பெற்றுதரவேண்டும். அதேவேளை திரும்பவும் இப்படிப்பட்ட பாதிப்பு இந்த தேசத்தில் நடக்காதபடி இதை நடப்பித்தவர்கள் சட்டத்தின் முன் நிறத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் .

நாட்டின் பாதுகாப்பு மீட்பு என கூறிக் கொண்டு நாட்டை அழிக்கின்றவர்கள் மத்தியில் இருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் ஆகவே நாங்கள் மாத்திரமல்ல என்னுடைய குடும்பம் மாத்திரமல்ல நீங்களும் உங்கள் குடும்பமும் இப்படி ஒரு சூழ்நிலைக்குள்; உள்வாங்கப்படாது இருக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட துரோகிகளையும் ஈனப்பிறவிகளையும் இந்த மண்ணையும் மக்களையும் விட்டு அகற்ற வேண்டியது என்னுடைய கடமையல்ல மட்டக்களப்பில் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.

மக்கள் ஒன்றை கருத்தில் கொள்ளவும் என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரே ஒரு பிள்ளை அருமையான சகோதரி குடும்பம் 6 பேர் பாதிக்கப்பட்டு 3 பேரை இழந்து நிற்கின்றேன் எனவே நான் இதனால் தினமும் படும் வேதனையும் வலியும் உங்கள் குடும்பத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் தாங்களை தங்களை தியாகிகளாக காட்டிக் கொண்டு இப்படிபட்டவர்களை இந்த  மணில் இருந்து அடித்து துரத்தவேண்டும் இது உங்களுடைய கடமை

கிழக்கை மீட்கவந்தோம் என கூறிக் கொண்டு கிழக்கை இன்னொரு சமூகத்துக்காக தனிப்பட்ட ஒருவரின் நன்மைக்காக அவர்களுடைய அரசியலுக்காக இன்னும் இன்னும் துரோகங்களை இழைத்து சமூகத்தை அழிக்கின்ற ஈனபிறவிகளை துரோகிகளை இந்த மண்ணைவிட்டு அகற்றப்படவேண்டும் இது எனது பணிவான வேண்டுகோள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

IMG_8049.JPG