கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு   விஜயம்.

(எம்.ஏ.ஏ.அக்தார்)   கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வருகை தந்ததிருந்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ. நிஹால் அஹமட் தலைமையில் பாடசாலையின் பல்வேறு விஷேட செயற்திட்டங்கள், பரீட்சை பெறுபேறுகள், விளையாட்டுத்துறை அடைவுகள், விஞ்ஞான
ஆய்வுகூடங்கள், இரு மொழி மூல கற்கைநெறி வகுப்பறைகள் மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பில் முழுமையாக கல்விப்பணிப்பாளர் ஆய்வு செய்தார்.
குறைந்த செலவுடன் ஆய்வுகூட மொன்றுக்கான பரிசோதனை பொருட்களை எவ்வாறு பெற்று பயன்படுத்துவது தொடர்பிலும்  பாடசாலை விஞ்ஞான பாட ஆசிரியர் எஸ்.எம்.ஸன்ஸீர் அவர்களினால் பணிப்பாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு புத்தாக்க முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டதோடு அவர்களின் பெற்றோர்களுடன் சந்தித்து கலந்துரையாடி தன்னுடைய விஷேட வாழ்த்துக்களை குறிப்பாக அதிபருக்கும் பாடசாலை சமூகத்துக்கும் தெரிவித்தார் .
இவ் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாகாண கல்விப் பணிப்பாளர், இப்பாடசாலையானது குறுகிய காலத்தில் பெரும் அடைவுகளை கண்டுள்ளமை தொடர்பிலும் எதிர்காலத்திலும் பல்வேறு அடைவுகளை தேசிய ரீதியில் பெற வாழ்த்தியதோடு இரு மொழி மூலமான  கல்வியை கற்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இக்கள விஜயத்தில்  மட்டக்களப்பு மத்தி முகாமைத்துவத்துக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.றமீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நினைவுச்சின்னமொன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.