பெரெண்டினா  நிறுவனத்தினால்   மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   பெரெண்டினா  நிறுவனத்தினால்   மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கும் நிகழ்வு  மண்முனைப் பற்று பிரதேச செயலாளர்  திருமதி ந.சத்தியானத்தி தலைமையில்  செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07)  நடைபெற்றது.
பெரண்டினா லைப் லைன் செயற்திட்டத்தின் கீழ் ஆரயம்பதி கிளையின் பயனாளிகளுக்கு நிதி வழங்கும்  ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் நஞ்சற்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை தமது பிள்ளைகளுக்கு  வழங்க வேண்டும் என்பதுடன்  வீட்டுத் தோட்டத்தை மேற்கொள்வதனால்  தமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்  என தெரிவித்தார்.

பெரெண்டினா தன்னார்வ மற்றும் நிதி நிறுவனத்தின் மூலம்  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மாவட்டத்தில்  போசாக்கு குறைபாட்டை  நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு செயற்றிட்டம் பெரண்டினா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் 13000 த்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இந் நிறுவனத்தினால் வாழைச்சேனை , செங்கலடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களிற்கு மொத்தமாக 45 மில்லியன் ரூபாய்  நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

கல்வி பொது சாதாரன தர பரீட்சையில் விசேட சித்தி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யும் காலப் பகுதிவரை  ஊக்குவிப்பு நிதி நிறுவனத்தினால்  வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வின் போது பெரெண்டினா நுண்நிதி  நிறுவன பிரதேச முகாமையாளர் பா.பிரதிலிபன் மற்றும் பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள்  நிறுவன  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குசான் பெணடிக் மற்றும் கிளை முகாமையாளர்கள், பயனாளிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.