கல்முனையில் 1926 உளநல ஆலோசனை மைய சேவைகள் விஸ்தரிப்பு.

(வி.ரி.சகாதேவராஜா)  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை  பிராந்திய சுகாதார பிரிவிலுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் உளநல ஆலோசனை மையத்தின் சேவைகள் 1926 என்ற தொலைபேசி எண்ணினூடாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரனின் தலைமையில் நேற்று முன்தினம் மாலை வைத்திய சாலையில் நடைபெற்றது.
1926 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்கின்ற பொழுது தேவையான உளநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆதரவைத்தியசாலை வைத்தியசகர் தெரிவித்தார் .
வைத்திய சாலையின் கல்வி பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் எஸ்.அழகரெத்தினம் ஆரம்ப அறிமுக உரை நிகழ்த்தினார்.
1926 என்ற இலக்கத்தை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த இடம்பெற்றது.
 கல்முனை ஆதாரவைத்திசாலையின் உளநல வைத்திய நிபுணர்  டாக்டர் ஏ.ஜி.எம். ஜுறைச், சிரேஸ்ட உளநல மருத்துவ அதிகாரி டாக்டர்  யூ.எல்.சராப்டீன் உளநலமருத்துவர் டாக்டர் எம்.ஏ.அனீஸ்அகமட் மருத்துவ அதிகாரி டாக்டர் பி.தாசிஸ் ஆகியோரும்  உளநல பிரிவு தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது.
 1926 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுகின்ற அத்தனை விடயங்களும் ரகசியமாக பேணப்படும். பரிட்சை தோல்வி குடும்ப உறவு தொடர்பான பிரச்சனை போதை வஸ்து பிரச்சனை உளநோய் பிரச்சனை அனைத்து விதமான உள சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்கின்ற பொழுது உரிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அங்கு தெரிவிக்கப்பட்டது.
 அண்மைக்காலத்தில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடைய தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.தோல்வி அடைந்த மாணவர்கள் உளநல ஆலோசனை தேவைப்பட்டால் இந்த இலக்கத்தோடு தொடர்பு கொண்டு தங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.
 இதனை ஆசிரியர்கள் பெற்றோர்களும் அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்கள்.
இறுதியில் கேள்விகளுக்கான பதில்கள் வைத்திய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.

SAVE_20230905_092547.jpgIMG-20230905-WA0024.jpgIMG-20230905-WA0032.jpgIMG-20230905-WA0019.jpgIMG-20230905-WA0040.jpg