தேசிய போட்டிக்கு தெரிவான விபுலானந்தா ஹொக்கி அணி

(வி.ரி.சகாதேவராஜா)

கல்வி அமைச்சு நடாத்துகின்ற தேசிய பெருவிளையாட்டு போட்டிக்கு கிழக்கு மாகாண சாம்பியனான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின்(தேசிய கல்லூரி) ஹொக்கி அணி தெரிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இடம் பெற்ற மாகாணமட்ட இறுதிப்போட்டியில் அம்பாறை டி எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலை ஹொக்கி அணியை எதிர்த்து விளையாடிய காரைதீவு விபுலானந்தா அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் அடிப்படையில் மாகாணசம்பியனாக தெரிவாகியிருந்தது.

பாடசாலை அதிபர் மயில்வாகனம் சுந்தரராஜன் வெற்றி பெற்ற வீரர்களையும் பயிற்றுவித்தவர்களையும் பாராட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்ட பெருவிளையாட்டு போட்டிகளில்ஹொக்கி சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டியில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அணியை ஒன்றுக்கு பூச்சியம் என்று கணக்கில் வெற்றி பெற்ற காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி இரண்டாம் அரை இறுதி போட்டியில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி வித்யாலயத்தினை இரண்டிற்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் அம்பாறை டி எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலை அணியினரை மூன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் வெற்றி பெற்றனர்.

அணியினர் 2023 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட பாடசாலை போட்டியில் மாகாண சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக்