நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்ஹா அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.ரஹ்மான், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுசுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்: நாட்டிலுள்ள பிள்ளைகளில் 40 சதவீதமான பிள்ளைகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை நிபர்த்தி செய்யும் வகையில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த வாரம் முதல் வாரம் ஒரு மாத்திரை வீதம் தொடர்ந்து 24 வாரங்களுக்கு (06 மாதங்களுக்கு) இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என்றார்