திருகோணமலையில் பௌர்ணமி தின நிகழ்வு..!

(அ . அச்சுதன்)
திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி தின நிகழ்வு  30.08.2023 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு  திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர்.  சரவணபஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர், சிறப்பு விருந்தினராக சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன், கௌரவ விருந்தினராக ஜின்னாநகர் சன சமூக நிலையத்தின் தலைவர் சாகுல் ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, கவியரங்கம், பேச்சு, பாடல், பொதுஅறிவு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
பௌர்ணமி தின சிறப்பு கவியரங்கில் திருகோணமலையின் கவிஞர்களான செ. ஞானராசா, அ. அச்சுதன், ஆசிரியர் மதிவதனி, ச.திருச்செந்தூரன் , வானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கவிபாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் நூலகத்தின் பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன்,  நூலகர் திருமதி . றிம்சான,  நூலக உதவியாளர்கள் , ஊழியர்கள், எமுத்தாளர்கள்,  கவிஞர்கள்,  மாணவர்கள் உட்பட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.