பல்துறை சார்ந்த பெண்களுக்கு கௌரவம்!

(அபு அலா )திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த 160 பெண்களை பாராட்டி கௌரவிக்கும் விழா ஹலோ TV ஹலோ FM நிறுவனத்தின் ஏற்பாட்டில் (23) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

 

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எப்.எம்.சரிக் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்கா பிரதம அத்தியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

சமூகசேவை, கல்வி, மருத்துவம், விளையாட்டு, சுற்றுலாத்துறை, அழகியல்துறை, கலை, கலாசாரம், அரச மற்றும் அரச சார்பற்ற தொழிற்துறை சார்ந்த பல்வேறுபட்ட பெண்கள் இவ்விழாவின்போது பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

1.JPG3.JPG4.JPG2.JPGIMG_5911.JPG