மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் பாத யாத்திரை

பாறுக் ஷிஹான்
 
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி இம்முறை பெரும் திரளான  பக்தர்கள் பாத யாத்திரையினை  சனிக்கிழமை ( 26) மேற்கொண்டனர்.

 
 அதன்போது கல்முனை அறுபடை அன்னதான குழுவினரினால் கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் வைத்து பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மென்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டன .
 
காரைதீவு கன்னகை அம்மன் ஆலயத்தின் முன்றலிலிருந்து ஆரம்பமான இப்பாத யாத்திரையின்போது பக்தர்கள் பக்தி பூர்வமாக யாத்திரை மேற்கொண்டதுடன் காரைதீவு  மாளிகைக்காடு சாய்ந்தமருது  கல்முனைக்குடி  கல்முனை  நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு அன்னமலை  தம்பலவத்தை ஊடாக மண்டூர் வரையிலான சுமார் 22 கிலோமீட்டர் தூரம் இவர்கள் பாத யாத்திரையின் மேற்கொண்டனர் .