விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

பாறுக் ஷிஹான்
 
அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி  -காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில்   சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று   ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

 
 மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை  (24) இரவு  சருகுப்புலி   உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
கடந்த காலங்களில் இம்மாவட்ட  பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை   பிடித்துள்ளதுடன்      வனஜீவராசி திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.