கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்றம்.

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் சீலரத்ன தேரர் உள்ளிட்ட இருவர் பங்கேற்றுள்ளனர்.