கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை வசதி குறைந்த மாணவர்களின் பாவனைக்கென பழைய மாணவர்களால் காலணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(எம்.எம்.ஜெஸ்மின் )  கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் இப்பாடசாலையில்  2000  ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் வசதி குறைந்த மாணவர்களின் பாவனைக்கென ஒரு தொகுதி காலணிகளை அதிபரிடம் கையளித்தனர்.
பாடசாலையில் கல்வி பயிலும்  காலணி அணிந்து வராத  மாணவர்களை பாடசாலை ஒழுக்காற்ற சபையினூடாக  அடையாளங்கள் கண்டு உரிய மாணவர்களுக்கு காலணிகளை வழங்குவது பற்றி அண்மையில் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதன் பயனாகவே குறித்த உதவியை 2000 ஆண்டு பழைய மாணவர்கள்  உதவி செய்வதாக  வழங்கிய உறுதிமொழி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில்  பிரதி அதிபர் எம்.ஏ. ஸலாம், விளையாட்டு பயிற்சிவிப்பாளர் எம்.ஏ.எம்.றியாழ், பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர்  எஸ்.எல்.ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர்  எம்.ஐ.எம். ஜிப்ரி,  2000 ஆம் ஆண்டுவரை மாணவர் அணி சார்பாக
ஏ.எல்.அஜ்மீர், எம்.எஸ். சிராஜ், எஸ்.எம். மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.