மட்டக்களப்பில் மத்திய வங்கியின் ஆதரவுடன் நிதித் தொழிலை மேற்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு .

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து  நடாத்திய  நிதித் தொழில் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

“அங்கீகரிக்கப்படாத முறையில் வைப்புக்களை ஏற்றலும், நிதித் தொழிலை மேற்கொள்ளலும்”  எனும் தொனிப்பொருளில்    இச்செயலமர்வு பிரதேச செயலாளர்  ந.சத்தியானந்தி  தலைமையில்  நடைபெற்றது.குறித்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை, கிழக்கு பிராந்திய முகாமையாளர் க. பிரபாகரன்,  மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பிரதிப்  பணிப்பாளர் சண்.குறிஞ்சிதரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்தது கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினர்.

இந்நிகழ்வில்  மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின்  கிராம சேவை, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள்  எனப் பலர்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.