மீராவோடை பிரதேச  வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு.

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)     மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு மீராவோடை பிரதேச   வைத்தியசாலைக்கான  அம்பியூலன்ஸ்  வண்டியை   மக்கள் பயன்பாட்டிற்காக வைத்தியசாலைக்கு மீள ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (23) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிக் குழுவிடம்
இவ்வம்புலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது.இதன்போது மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  சுகுணன் வைத்தியசாலைப் பணிகளை பிரதேச மக்களுக்கு வினைத்திறனாக பயனளிக்கும் முறையில் முன்னெடுப்பதற்கான   ஆலோசனைகளையும் வழங்கினார்.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டி பழுதடைந்திருந்த நிலையில், திருத்த வேலைகளுக்காக  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.