கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்முனை அல் அஸ்ஹர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

(எம்.எம்.ஜெஸ்மின்)   12 வயதுக்குட்பட்ட கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்முனை அல் அஷ்ஹர் விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக  தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 4 அணிகள் கலந்து கொண்டிருந்தன.
 உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஸுரைப் ஹம்தி புகுத்திய  அபார கோலினால் அல் அஷ்ஹர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.
ஸுரைப் ஹம்தி  கல்முனை பிரிலியன்ட் விளையாட்டு கழகத்தின்  சிரேஷ்ட வீரரும் கிழக்கு மாகாணத்தின் முன்னணி உதைபந்தாட்ட  வீரருமாக திகழ்ந்த  ஏ.எல்.எம்.றவுப் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.