கடந்த காலங்களில் இந்த விவாகரத்து வழக்குகள் பிரியும் தருவாயிலிலேயே காணப்பட்டன. அதில் காதி நீதிபதி மற்றும் நிர்வாகத்தினர் சமயோசிதமான முறையில் முயற்சியினைக் கையாண்டதன் பயனாக அவர்களைச் சேர்த்து வைத்து ஒரே குடும்பமாக, சந்தோஷமாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அதில் ஒரு வழக்கு கடந்த 8 வருடங்களாக விவாகரத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பேசப்பட்டு வந்தது. அந்த விவாகரத்து வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தி, பிரிந்திருந்தவர்களைச் சேர்த்து வைத்தமையானது சாய்ந்தமருது பிரதேசத்தில் பேசப்படும் ஒரு விவாகரத்து வழக்காகக் காணப்படுகிறது.
இன்றும் சாய்ந்தமருது காதி நீதிமன்றத்தில் தொடரப்படும் விவாகரத்து வழக்குகளை அவர்களைப் பிரிந்து செல்ல விடாது, அரும்பாடுபட்டாவது அவர்களைச் சமரசம் செய்து, சேர்த்து வைப்பதற்கான கடுமையான பிரயத்தனங்களை சாய்ந்தமருது காதி நீதிமன்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பான பணியைச் செய்து வருகின்ற சாய்ந்தமருது காதி நீதிபதி உட்பட அதில் பணியாற்றும் ஜுரிமார்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் தமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
|