மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திக்கான “பேங்கிங் “கிளினிக்”

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)    மட்டக்களப்பு மாவட்டத்தின்   மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் “பேங்கிங் கிளினிக் (Banking Clinic)” நிகழ்வு இன்று (23) மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  முயற்சியாளர்களுக்கு  கடன் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நோக்கத்துடன் அரச, தனியார்  வங்கிகள் மற்றும் ஏனைய தொழில் பயிற்சிக்கான நிறுவனங்கள் பங்கேற்று, தொழில் முயற்சியாளர்களையும் வங்கிகளையும் இணைத்து தொழில் முயற்சிக்கான கடன்கள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும்  அதிகமான முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர்  பங்கேற்றனர்.