சாய்ந்தமருது  மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும்  தோணா வாவியில் நீர்க்களைகள் வளர்ந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   காரைதீவில் இருந்து ஆரம்பமாகி மாளிகைக்காடு , சாய்ந்தமருது ஊடாக குறுக்கறுத்து சாய்ந்தமருது முகத்துவாரத்தில் கலக்கும் தோணா வாவியில் நீர்க்களைகள் வளர்ந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று  வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தோணா வாவியை ஆற்றுவாழைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதுடன் தொற்று நோய்களும் பரவலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
பகலிலும் இரவிலும் துர்நாற்றம் வீசுவதுடன் விச ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.