அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாசிப்பயறு பொதிகள் வழங்கி வைப்பு. 

(நவாஸ்)       அட்டாளைச்சேனை  பிரதேசத்திற்குட்பட்ட தீகவாபி திராய்க்கேணி மற்றும் போன்ற பின்னடைந்த கிராமங்களுக்கு  அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத் திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக நடுகைக்கான பாசிப்பயறு பொதிகள்  வழங்கும் நிகழ்வு இன்று புதன் (23) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அதன் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹிஜா  முஷாபீர் தலைமையில்   வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல்  பணிப்பாளர் ஏ.எல்.மஜீத் விவசாய போதனாசிரியர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.