( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று மகா பனங்காடு மகாசக்தி கிராமம் பகுதியில் வைத்து 38 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமைதிருக்கோவில் விசேஷ அதிரடி படையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதன் காரணமாக அவரை 72 மணித்தியாலங்கள் போலீஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மாவட்ட போலீஸ் அத்தியட்சகரின் அனுமதியோடு அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் நேற்றும(21) திங்கட்கிழமை ” வி” அறிக்கையினை அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கல் செய்திருந்தார்.
அவ்வழக்கானது விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட போது, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம் முகமட் ஹம்சா சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் போலீஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியதோடு, 72 மணித்தியாலங்கள் முடிந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார்..