அவுஸ்திரேலியா பிரதிநிதி முன்னிலையில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய றோட்டரிக்கழகம்.

( வி.ரி. சகாதேவராஜா)  கல்முனை ரொட்டரிக் கழகத்தின்  2023/2024 ஆண்டிற்கான  தலைவர்  ரொட்டேரியன் ஏஎல்ஏ. நாசர் தலைமையில் கல்முனை கல்வி மாவட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவையாவும் அவுஸ்திரேலியா கன்பேரா வெஸ்டர்ன் கிறிக் ரொட்டரிக்கழகம் பிரதிநிதி ரொட்டேரியன் த.ரவீந்திரன் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக  நேற்று முன்தினம்(21.08.23 )மூன்று  பாடசாலைகளுக்கு, திராய்க்கேணி அ.தி.மு.க.க பாடசாலை, கோளாவில் விநாயகர் வித்தியாலயம்,மற்றும்  மாணிக்கமடு அதக பாடசாலை ஆகியவற்றிற்கு 155,000/ பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
 இதற்கான நிதியினை
கன்பேரா வெஸ்டர்ன் கிறிக் ரொட்டரிக்கழகம் வழங்கியது.அக்கழகத்தின் அங்கத்தவரான ரொட்டேரியன் த.ரவீந்திரன் கலந்துகொண்டு அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைத்தார்.
 இந்நிகழ்விற்கு செயலாளர்  ரொட்டேரியன் கே. குகதாசன்,  சமூக சேவைகள் பணிப்பாளர் ரொட்டேரியன்  மு.சிவபாதசுந்தரம், ரொட்டேரியன் மா. சிதம்பரநாதன் மற்றும் உறுப்பினர் ரொட்டேரியன் என். றதீசன்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும் என நலன்விரும்பிகள் கருத்துரைத்தனர்.