அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது மாநாடும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் புதிய நிருவாகத் தெரிவும்  தெரிவும்.

( ஏ.எல்.எம்.ஷினாஸ்)  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது மாநாடும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் புதிய நிருவாகத் தெரிவும் போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் (20) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்ரசிறி பிரதம அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கலாநிதி றமீஸ் அப்துல்லா, தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஊடகத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பிரதேச ஊடகவியலாளர்கள் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் நடப்பாண்டுக்கான புதிய நிருவாக சபை தெரிவு தற்காலிக தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டது.

இதில் போரத்தின் புதிய தலைவர்: எம்.எஸ்.எம்.ஹனீபா, செயலாளர்:ஏ.எல்.எம்.ஷினாஸ், பொருளாளர்: எம்.எப்.எம்.நவாஸ், தவிசாளர்: கலாபூசணம்.எம்.ஏ.பகுர்டீன், பிரதித் தலைவர்: ஏ.எல்.ஏ.நிப்றாஸ்;, அமைப்பாளர்: யூ.எல்.எம்.றியாஸ், கணக்காய்வாளர் எம்.எஸ்.எம்.ஏ.மலீக், உப தலைவர்: எம்.சஹாப்தீன், உப செயலாளர்: வீ.சுகிர்தகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதேச ரீதியாக பின்வருவோர் நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர் ஏ.எச்.றஸ்மி (இறக்காமம்), என்.எம்.எம்.புஆத் (சம்மாந்துறை), எம்.எஸ்.எம்.றிஸ்வான் (அக்கரைப்பற்று), ஐ.ஏ.சிறாஜ் (பாலமுனை), கே.எல்.அமீர் (ஒலுவில்), ஏ.அஸ்வர் (மாளிகைக்காடு), யூ.கே.காலிதீன் (சாய்ந்தமருது), ஏ.பி.எம்.அஸ்ஹர் (கல்முனை), எம்.ஆர்.எம்.முஸ்தபா (மத்திய முகாம்)