நாடு பூராகவும்  கொள்ளையிட்டு வரும் கொள்ளை குழுவைச் சேர்ந்த இருவர் மட்டக்களப்பில் கைது.

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பில் தேவாலயத்தின் திருவிழாவின் போது பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தொடுத்த சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட  கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் குழுவை இயக்கிவந்த வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை  சனிக்கிழமை (19) மாலை மட்டு சிறைச்சாலைக்கு அருகில் வைத்து கைது செய்ததுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15 ம் திகதி மட்டு மரியால் தேவலாயம் மற்றும் மாமாங்கேஸ்லரர் ஆலைய திருவிழாவின் போது 19 பவுண் தங்கசங்கிலிகள் தீருட்டுபோயிருந்த சம்பவத்தில் 4 பெண்களை கைது செய்தனர்.

இதில் தேவாலய திருவிழாவில் கலந்துகொண்ட பெண் ஒருவரின் 2 அரை பவுண் கொண்ட தங்க சங்கிலியை அறுத்தெடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்களை கைது செய்து நீததிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிலையில் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட 3 பெண்களை சிறைச்சாலைக்கு பார்ப்பதற்காக சென்ற 28 வயதுடைய இருவரை சம்பவதினமான நேற்று சிறைச்சாலைக்கு அருகில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்படவர்கள் வாழைச்சேனை திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர்கள் எனவும் நாடு பூராகவும் ஆலையங்கள் தேவாலயங்களில் கொள்ளையிடும் கொள்ளை கும்பலை இயக்கி வருபவர்கள் எனவும் இவர்கள் நாடு பூராக ஆலைய தேவாலய திருவிழாக்கள் உற்சவங்கள் தொடர்பாக முகநூல்களில் வெளிவரும் விளம்பரங்களை தரவு இறக்கம் செய்து அதனை நாடு பூராகவும் உள்ள தமது கொள்ளை குழுவைச் சோந்த பெண்களுக்கு வாட்ஸ்;ஆப் மூலம் அந்த விளம்பரங்களை அனுப்பியுள்ளதாகவும்.

இந்த கொள்ளை குழுவின் பிரதான சூத்திரதாரி நீர்கொழும்பைச் சேர்ந்த சுரேஸ் எனவும் அவன் உட்பட கொள்ளை குழுவைச் சோந்த பலர் தலை மறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்திருவிழாவின் போது 28 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்து இதுவரை  கொள்ளையிட்ட தங்க சங்கிலிகள் எதுவும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.