இன்று கல்லடியில் இ.கி.மிஷனின் தண்ணீர் பந்தல்

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு இ.கி.மிஷனின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை
கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இடம் பெற்றது.
காலஞ்சென்ற திருமதி சண்முகரட்ணம் (துளசி அம்மா )ஞாபகார்த்தமாக  தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
 ராமகிருஷ்ண மிஷன் கல்லடி சிறுவர் ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர் இத் தண்ணீர் பந்தலை நிகழ்த்தி வைத்தனர்.
பெருந்திரளான பக்தர்கள் அதில் பங்கேற்றனர்.