அரச பணியில் ஓய்வு பெற்றாலும் மக்கள் மனதில் ஓய்வு பெறாத நாயகன்.

(வாஸ் கூஞ்ஞ)

அரச சேவையில் ஒரு ஆசிரியராக பணியை ஆரம்பித்து பொது நிதி திணைக்களம் , திறைச்சேரி , நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் தனது 33 வது அரச சேவையை நிறைவு செய்து கடந்த 07.08.2023 அன்று ஓய்வுப் பெற்றுக் கொண்டார் இலங்கை கணக்காளர் சேவை விஷேட தரத்தைச் சேர்ந்த திரு உலகநாதன் சந்திரக்குமாரன் அவர்கள்.

ஓய்வுநிலை கண்காளர் யாழ் மாவட்டத்தின் இளவாலை வயாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தனது அரச கடமையில் 1989ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக தனது அரச பணியைத் தொடங்கி பின் 1990 ம் ஆண்டு முதல் இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து முதல் நியமனமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் 2003 ம் ஆண்டு வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் பதில் பிரதம கணக்காளராகவும்

2003 லிருந்து 2005ம் ஆண்டு வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் பிரதி மாவட்டச் செயலாளராகவும் (நிதி)

2005 லிருந்து 2007 வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளராகவும்

2007 லிருந்து 2009 வரை தேசத்தை கட்டியெழுப்புதல்  மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கணக்காளராகவும்

2009 லிருந்து 2010 வரை தேசத்தை கட்டியெழுப்புதல்  மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட திட்ட அலுவலகராகவும் (நிதி)

2010 லிருந்து 2015 வரை பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட கணக்காளராகவும்
,
30.01.2015 தொடக்கம் 09.11.2015 வரை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் பிரதம கணக்காளராகவும்

2015 லிருந்து 2018 வரை வடக்கு மாகாணம் பிரதிப் பிரதம செயலாளராகவும் (நிதி)

இதைத் தொடர்ந்து இவர் மின்னனு அரச கொள்முதல் செயலகம் நிதி அமைச்சின் பகுதி நேர திட்டப்பணிப்பாளராகவும் , பொது நிதி திணைக்களம் . திறைச்சேரி  , நிதி அமைச்சில் 06.08.2023 வரை மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் தனது அரச பணியிலிருந்து தனது மணிவிழாவுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் திரு உலகநாதன் சந்திரக்குமாரன் அவர்கள். மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய சபையில் இணைச் செயலாளராக செயற்பட்டு வருவதுடன் மன்னார் நலிவுற்றோர் நலன்புரி சங்கம் (அன்னை இல்லம்) மற்றும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகப் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

இதற்கு மேலாக இவர் மன்னார் லயன்ஸ் கழகத்தின் 304பி யில் இணைந்து மன்னார் மாவட்டத்தின் கல்வி , பொரளாதாரம் நலிவுற்று இருப்போரின்  வாழ்வாதாரத்துக்கு தன்னால் இயன்ற பணிகளை செய்து இங்கு மக்களின் மனதில் நீங்காத ஒருவராக திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.