வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்.

( வாஸ் கூஞ்ஞ)  வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 20.08.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு வவுனியா கத்தானந் இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளதாக இப்பொதுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.செல்வகுமரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே தங்கள் பிரதேச செயலங்களில் பணியாற்றும் இச்சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளுக்கு அமைவாக அனுமதிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சங்கத்தில் யாழ்ப்பாணம் . கிளிநொச்சி , வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் , திருகோணமலை , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களின் கிராம உத்தியோகத்தர்கள் உறுப்பினர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)