நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு புதிய  தண்ணீர் பவுசர் கையளிப்பு.

(டி.சந்ரு செ.திவாகரன்)   நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா  பெறுமதியான தண்ணீர் பவுசர் ஒன்றினை கோயிகா (KOICA) மற்றும் யூ , என் ஹெபிடாட் (UN – HABITAT ) நிறுவனங்கள் ஒன்றினைந்து  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில்  நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் கோயிகா நிறுவனத்தின் பணிப்பாளர் கிம் , யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் முகாமையாளர் சலிம் கறீம் சாடா மற்றும் இரு நிறுவனத்தின் ஏனைய  உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.