(ஹஸ்பர்) திருகோணமலை கடற்கரை முன்றலில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகமொன்று (15) இடம் பெற்றது.குறித்த நிகழ்வினை லீட்ஸ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சமூக மட்ட அடிப்படையிலான சிறுவர் தலைமைத்துவ செயத்திட்டத்தினை குறித்த நிறுவனமானது குச்சவெளி பிரதேச செயலகத்துகுட்பட்ட 6 கிராமங்களில் செயற்படுத்தப் பட்டு வருகிறது. நாவற்சோலை, சலப்பையாறு, பெரியகுளம், திருமால்புரம், அடம்போடை மற்றும் வேலூர் கிராமங்களில் உள்ள பிள்ளைகள் தங்களுடைய கிராமங்களில் உள்ள பிரச்சைனைகளை அடையாளம் கண்டு அவற்றை குறைப்பதற்கான வழிமுறைகளான வீதி நாடகமாகவும் போஸ்டர் பிரச்சாரமாகவும் திருமால்புரம் கிராமத்தில் விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
போதை பாவனையால் ஏற்படும் தீய விளைவுகள் குடும்பம் சமூகத்தில் பாதக பாதக விளைவுகளை எப்படி ஏற்படுத்துகிறது என்பது தொடர்பில் இவ் வீதியோர நாடகத்தில் எடுத்துக்காட்டப்பட்டது இதனை சிறுவர் மட்ட கழக உறுப்பினர்கள் பல கதாபாத்திரங்களை வைத்து திறம்பட நடித்து காட்டியுள்ளனர். இதில் லீட்ஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.தஸ்லீம், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.