ஊடகவியலாளர் குருநாதன் நினைவலைகள் திருகோணமலையில் நிகழ்வு.!

(ஹஸ்பர்)
திருகோணமலையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென ஓர் வழித்தடத்தை உருவாக்கிய அமரர் சின்னையா குருநாதனின் அகவைதினமான நேற்று  (11.08.2023) அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏறபாட்டில் நடைபெற்ற பகிர்வும் ஒன்றுகூடலும் நிகழ்வு திருகோணமலை நகரசபை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “நானும் குருநாதனும்” எனும் நினைவேடும் வெளியிடப்பட்டது.

இவ் நிகழ்வு  கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.