(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் விதமாக உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலைஞர்களுக்கு இவ்வருடத்திற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு நேற்று (08) உதவி பிரதேச செயலாளர் எம். ஏ. சி. றமீஸா தலைமையில் இடம்பெற்றது.இக் கொடுப்பனவுகள் அகமட் உசனார் முகமட் ஹக்கீம், எம். ஏ. அப்துல் மஜுத், ஏ. யு அசனார், ஆகிய மூன்று கலைஞர்களுக்கு ஒருவருக்கு தலா 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன்,கோ.ப.மத்தி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்..திலிபா, ஜே .ரதிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.