பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட “கையடக்க தொலைபேசிப் பாவனை  ” தொடர்பான விழிப்புணர்வு நாடகம்.

(அஸ்ஹர்  இப்றாஹிம்)   பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் தரம் 8  “வை” மாணவர்களால் காலை ஒன்றுகூடலின் போது “கையடக்க தொலைபேசி பாவனை” தொடர்பான விழிப்புணர்வு நாடகம்  அரங்கேற்றப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த  மாணவர்களுக்கும்
நெறிப்படுத்திய வகுப்பாசிரியர் செல்வி.ப.டிசாந்தி அவர்களுக்கும் அதிபர் எம்.சபேஸ்குமார் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும்  ,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.